மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நிவின்பாலி. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் பெண் ஒருவர் சமீபத்தில் நடிகர் நிவின் பாலி மீது பாலியல் புகார் குற்றசாட்டு தெரிவித்தார். அந்தப் புகாரின் பேரில் நடிகர் நிவின்பாலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்தப் பெண் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நிவின் பாலி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தன் புகாரில் கூறியிருந்தார். தன்னை துபாய்க்கு அழைத்து சென்று நிவின் பாலி பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறிய நிலையில் தற்போது அந்த பெண் கூறிய அதே நாளில் கொச்சியில் உள்ள ஒரு ஹோட்டலில் நிவின் பாலி தங்கி இருந்ததற்கான ரசீது வெளியாகி உள்ளது.

அதாவது அந்த சமயத்தில் நடிகர் நிவின்பாலி கொச்சியில் உள்ள கிரவுன் பிளவுசா ஹோட்டலில் கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி மதியம் 2:30 மணி முதல் டிசம்பர் 15ஆம் தேதி மாலை 4.30 மணி வரை தங்கி இருந்தார். அதன் பிறகு இயக்குனர் வினித் சீனிவாசன் அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறிய அதே நாளில் நிவின் பாலி தன்னுடன் தான் இருந்ததாகவும் அப்போது வருஷங்கள் தேசம் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் சூட்டிங் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தான் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்றதாகவும் அதே சமயத்தில் ஒரு வெப் தொடரிலும் நிவின் பாலி நடித்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் நிவின் பாலி மற்றும் 5 பேர் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் கூறி இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தற்போது முக்கிய ஆவணம் ஒன்று சிக்கியுள்ளது. மேலும் இது மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.