தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு ராணுவ வீரரின் கதையை மையப்படுத்தி உருவாகும் படமாகும்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இந்நிலையில் இன்று அமரன் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.