
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சித்தார்த். இவர் ஹிந்தியிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் ,சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அதிதி ராவை காதலித்து வருகிறார். நடிகை அதிதி ராவ் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக வெளிவந்த தகவலையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் நடிகர் சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் நடிகை அதிதியும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்தான். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.