
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியான நிலையில் வருகிற 6-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் நடிகர் ஆரவ் விடாமுயற்சி படத்தின் சண்டைக் காட்சியின் போது தான் ஒரு பயங்கர விபத்தில் சிக்கியதாக கூறினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து உயிர் பிழைத்து விட்டேன். ஆனாலும் அஜித் சார் என்னை விடாமல் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். பின்னர் என்னை கட்டிப்பிடித்து அவர் மன்னிப்பும் கேட்டார் என்று கூறியுள்ளார். மேலும் நடிகர் அஜித் தற்போது கார் ரேஸில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.