
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18-வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேற்றப்படுவதாக தற்போது பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். அதாவது அவருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத நிலை உருவானதால் அவர் ஐபிஎல் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார். ஆனால் அவருக்கு பதிலாக வேறு எந்த வீரரையும் தேர்வு செய்யவில்லை. மேலும் நடப்பு சீசனில் மேக்ஸ்வெல் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.