
இந்த பூமியில் பல்வேறு அதிசயமான விஷயங்கள் இருக்கிறது. இதற்கு பூமியில் உள்ள உயிர்கள், இயக்கங்கள், செயல்பாடுகள் என பலவற்றை உதாரணமாக சொல்லலாம். அப்படி வினோதமான நிகழ்வு ஒன்றை ஒருவர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவவை பார்த்த யாராக இருந்தாலும் நிச்சயம் ஒரு நொடி ஸ்தம்பித்துதான் போவார்கள். அதாவது இந்த வீடியோவின் சிறப்பு என்ன என்றால் இதில் ஒளிந்துள்ள ஒளியியல் மாயை உணர்வு தான். எதை பார்க்கிறோமோ அது இருப்பது போல நம்முடைய கண்களுக்கு காட்டி பிறகு இல்லாத ஒன்றை உணர்த்துகிறது.
பொதுவாக இந்த வகையான ஒளியியல் மாயை நம்முடைய மூளை மற்றும் கண்களை ஏமாற்றுகிறது. இதை தான் ஒளியியல் மாயை என்று கூறுவார்கள். அது போன்று இந்த வீடியோவில் நதியானது பின் புறத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதை ஒருவர் வீடியோவாக எடுக்கிறார். அப்பொழுது அவர் அந்த நதியை நடந்து கொண்ட வீடியோ எடுக்கிறார். அந்த நேரத்தில் நதி அப்படியே அசையாத உணர்வை நம்முடைய கண்களுக்கு கொடுக்கிறது. ஒரே இடத்தில் இருந்து வீடியோ எடுக்கிறார் ஆனால் அப்பொழுது நதி ஓடுகிறது. இந்த ஒளியில் மாயை உணர்வு கொண்ட வீடியோ உனது தற்போது ஏராளமானவர்கள் லைக் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram