சென்னை புரசைவாக்கத்தில் காலிக் (32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நாசியா (32) என்ற பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நாசியாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட காலிக் அவரை கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் அவர் காலிக்கை விவாகரத்து செய்யும் மனநிலையில் இருந்துள்ளார். இதனிடையே அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த காலிக் தூங்கி கொண்டிருந்த நாசியா முகம், கை, கால்களில் அயன்பாக்ஸை கொண்டு சூடு வைத்துள்ளார். இதனால் நாசியா வலி தாங்க முடியாமல் கத்தி அலறினார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து காலிக்கை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.