
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியில் நாகேந்திரன் (54) ரெஜினா மேரி (47)தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சதீஷ்குமார் என்ற மகனும், வர்ஷினி என்ற மகளும் இருக்கும் நிலையில் சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகி தன் மனைவியுடன் ஓசூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் நாகராஜனுக்கு தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டாதால் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் ரெஜினா மேரி தன் மகன் வீட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் முத்தையாபுரம் பகுதியில் உள்ள வீடு ரெஜினா மேரி பெயரில் இருந்ததால் அதை ரெஜினா மேரி மற்றும் நாகேந்திரன் இருவருடைய பெயருக்கும் மாற்ற உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் ரெஜினா மேரி ஊருக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரன் வீட்டில் இருந்த கத்தி மற்றும் அரிவாள் போன்றவற்றால் தன்னுடைய மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரெஜினா மேரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.