
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சித்திரை செல்வன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் கடந்த 17ஆம் தேதி சென்னை சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்ய செல்வி என்பவர் வந்த நிலையில் வீட்டின் கதவுகள் உடைந்திருப்பதை பார்த்து போலீசாருக்கும் சித்திரைச் செல்வனுக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பீரோவில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.
அதேசமயம் திருடன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், என்னை மன்னித்து விடுங்கள், நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகின்றேன், என் வீட்டில் உடம்பு சரியில்லை, அதனால் தான் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்