ஆர்.ஜி கே இயக்கிய வாஸ்கோடகாமா படமானது ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கே.எஸ் ரவிக்குமார், நடிகை தேவயானி கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நடிகை தேவயானி பேசுகையில், என் தம்பி நகுல் நடித்த பட விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவனுக்கு நான் முறையில் அக்கா என்றாலும் வயதில் சின்னவனாக இருப்பதால் அவனை நான் அம்மா போல பார்த்துக் கொள்வேன். அவனுக்கு நான் என்றும் அம்மாதான். சின்ன வயதிலிருந்து துறுதுறு என்று இருப்பான் .நல்ல திறமைசாலி. இன்று என் அப்பாவும் அம்மாவும் இல்லை. ஆனால் இங்கு நாங்கள் இருப்பதை பார்த்து அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எப்போதும் அவனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் இப்போதும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறி வாழ்த்தியுள்ளார்.