
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள் பலர் நேரடியாக விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் வரும் நிலையில், அவருடைய நண்பர் அஜித் யிடம் இருந்து நேரடியாக எந்த ஒரு வாழ்த்து செய்தியும் இதுவரை வந்ததாக தகவல் இல்லை. ஆனால் ரசிகர்கள் சிலர் நடிகர் அஜித் வாழ்த்து தெரிவிப்பது போன்ற சில வீடியோ காட்சிகளை எடிட் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
அந்த வகையில், விடாமுயற்சி போஸ்டர் வெளியானது. அதில், நடிகர் அஜித் ஹைவே சாலை ஒன்றில் நடந்து செல்வது போன்ற புகைப்படம் இருக்கும். அதை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை நடிகர் அஜித் கையில் பிடித்தபடி சாலையில் நடந்து செல்வது போல் வீடியோவாக வடிவமைத்து அதை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளனர்.
Evanda avan pannavan 🙄 #TVKVijay #TamizhagaVetriKazhagam pic.twitter.com/vaUN7O4iC5
— Cinemapatti (@cinemapatti) August 22, 2024