
2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் சிஎஸ்கே அணிகள் இடையேயான போட்டி நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. பெங்களூரு அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், இந்தப் போட்டியில் நடந்த சிறப்பான விஷயம் என்னவென்றால் தோனி அடித்த சிக்சர் தான். அவர் அடித்த சிக்சரால் பந்து மைதானத்திற்கு வெளியே விழுந்தது. அதன் காரணமாக பெங்களூரு அணிக்கு புதிய பந்து கிடைத்தது. வெளியே சென்ற ஈரமான பந்தை விட புதிய பந்தில் பந்து வீச எளிதாக இருந்தது. இந்த நிலையில் அடுத்த பந்திலேயே அவர் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார் என்று கூறியுள்ளார்.