
இந்தியாவில் பலரும் தங்களின் மொபைல் ஃபோன்களை அடிக்கடி தொலைத்துள்ளனர். இதுகுறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவலர்கள் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி அதனை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இதற்காக மத்திய தொலைதொடர்பு துறை சார்பாக சஞ்சார் சாத்தி என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக தொலைந்து போன செல்போன்களை கண்டறிந்து அடையாளம் காண முடியும். இந்த இணையதளம் மூலமாக இதுவரை தொலைந்து போன ஏழு லட்சத்து 25 ஆயிரத்து 900 செல்போன்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே இனி தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடிக்க இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.