திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர். மு க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கிடும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம். திராவிட மாடல அரசு எல்லோருக்கும் எல்லாம் என்ற லட்சியத்துடன் திகழ்கிறது.

சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களும் அவர்களின் மறைமுக கூட்டாளிகளும் திமுகவை வீழ்த்தி விட முடியாதா? என தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்பு கணக்காகவே முடியும் என்பதை சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் கணக்கு தீர்மானிக்கும்.

நம் மக்களிடம் செல்வோம் இந்த அரசு மக்களுக்காக செய்ததை சொல்வோம். மக்கள் பெற்ற பயன்களை சமூக வலைதளங்கள் வாட்ஸ் அப் குழுக்கள் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கும் திமுகவின் நல்லாட்சி தொடரும் என்பதை மக்கள் மனநிலை காட்டுகிறது.

ஆட்சி செய்ய கிடைத்த வாய்ப்புகளில் சமூக, பொருளாதார, முன்னேற்றத்தை திமுக அரசு உறுதி செய்துள்ளது. ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறும் வகையிலான திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது என கூறியுள்ளார்.