இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பலர் வீடுகளை இழந்து தவித்து வருவதோடு சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.