வடகொரியா அவ்வப்போது ஏவுகணைகளை ஏவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் வடகொரியா ஏறும் ஏவுகணைகளால் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து பதற்றத்தில் இருந்து வருகின்றது.

இதனால் வடகொரியாவை சீண்டும் வகையில் தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் ராணுவ பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு எச்சரிக்கை விடும் வகையில் இன்று ஒரே நாளில் நான்கு ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகின்றது.