
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள 3 பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சறிவு ஏற்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து பலி எண்ணிக்கை என்பது அதிகரித்து வருகிறது. அந்த பகுதிகளில் மீட்பு பணிகள் என்பது நடந்து வரும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து பலரும் வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள உதவி செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விக்ரம் ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து 50 லட்ச ரூபாயை வழங்கியுள்ளனர். மேலும் SRM பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.