மும்பையில் உள்ள அடல் சேது பாலத்தில் இருந்து ஒரு பொதுத்துறை வங்கி மேலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி காலை 10 மணியளவில், அவர் தனது காரை பாலத்தின் தெற்கு பகுதியில் நிறுத்தி, திடீரென பாலத்தில் இருந்து குதித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர் பற்றிய விசாரணையை தொடங்கினர்.

போலீசார் அவரது காரை சோதனை செய்தபோது, அந்த நபர் பரேலியில் வாடகைக்கு வசித்து வந்ததை அறிந்தனர். மேலாளரின் மனைவி, ஏழு வயது மகள் மற்றும் மாமியாருடன் வாழ்ந்த அந்த நபர், தனது பணி அழுத்தத்தை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக மனைவி தெரிவித்தார். மேலதிக விசாரணைகளில், அவர் கடல் பகுதியில் குதித்ததால் உடனடியாக அணுக முடியவில்லை.

மேலும் சமீபகாலமாக வேலை அழுத்ததினால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் மற்றும் பணியில் இருக்கும் போதே உயிர் இழக்கும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.