
கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
கனமழையால் திருச்செந்தூர் முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் வரும் பகுதி வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. கடலும் – கரையும் தெரியாத அளவிற்கு திருச்செந்தூரில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதி கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனிடையே மீட்பு பணிகள் என்பது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் 9 அமைச்சர்களை நியமித்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார்..
இந்த நிலையில் வரலாறு காணாத கனமழை காரணமாக பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலை சுற்றி தற்போது வெள்ள நீரானது சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கடலை ஒட்டி இருக்கக்கூடிய கோவிலை சுற்றிலும் வெள்ள நீரானது சூழ்ந்துள்ளது. குறிப்பாக பக்தர்கள் கிரிவலம் செல்லும் பகுதியில் முழுமையாக தண்ணீர் தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலை சுற்றிலும் கடலும் – கரையும் தெரியாத அளவிற்கு மழை நீர் சூழ்ந்து இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
எனவே மழைநீர் வடிந்து இயல்பு நிலை திரும்ப, அதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியாத ஒரு சூழலில் தற்போது திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் கூட மழை வெள்ளத்தால் தற்போது பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கோவிலை சுற்றி முற்றிலுமாக மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பக்தர்கள் கிரிவலம் செல்லக்கூடிய அந்த பகுதி என்பது முற்றிலும் மழை நீரால் சூழ்ந்து இருக்கிறது. தண்ணீர் என்பது முட்டிக்கால் அளவிற்கு இருக்கிறது. அங்கே சில பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல திருச்செந்தூரிலும் பல இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. இதனிடையே 4 மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, திருச்செந்தூர் முருகன் கோவிலை சுற்றி மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. இதனால் திருச்செந்தூர் தனித்தீவு போல காட்சியளிக்கிறது. #Tiruchendur #ThoothukudiRainfall pic.twitter.com/zqtRm5BhOu
— Idam valam (@Idam_valam) December 18, 2023
புதுச்சேரியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும்…..!!!! #Tiruchendur #NellaiRains pic.twitter.com/lHOcgqiy8G
— Korkadu Ashok (@dharunkumaran) December 18, 2023