தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தற்போது சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தொகுதி மறு வரையறை கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உட்பட ஏழு மாநிலங்களில் இருந்து நிர்வாகிகள் என மொத்தம் 24 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது தமிழக அரசு இரு மொழிக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதாவது இந்தஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள முதல்வர்களின் பெயர்கள் அவர்களின் தாய்மொழி மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் மும்மொழி கல்விக் கொள்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் தமிழக அரசு இரு மொழி கல்விக் கொள்கையை வலியுறுத்தும் விதமாக இப்படி பெயர் பலகை வைத்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.