
அதிமுக கட்சியின் விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என்று சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ” அதிமுக கட்சியின் விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை. தேர்தல் ஆணையத்துக்கு இரண்டு அதிகாரங்கள் மட்டுமே உள்ளது . அதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி செயல்பாட்டில் மட்டுமே தேர்தல் ஆணையம் தலையிட முடியும் .மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 29 ஏ வில் உள்ள ஒன்று முதல் 8 வரை உள்ள உட்புரிவின் ஒரு கட்சியின் சட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் பதிவு செய்ய வேண்டும்.
29 ஏ பிரிவு 9தின் உட்பிரிவின்படி கட்சி அமைப்பு மாற்றங்களை உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். அதனை பதிவு செய்வது மட்டும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அதிகாரமாகும். அதன்படி தேர்தல் ஆணையம் குமாஸ்தா வேலையை மட்டும் தான் செய்ய வேண்டும்” என்று பேசி உள்ளார்.