அதிமுக கட்சியின் போது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலை பார்த்து பயப்படுகிற மற்றும் அச்சப்படுகிற இயக்கம் அதிமுக கிடையாது. கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறாத நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களை அடைத்து வைத்து ஜனநாயக படுகொலை செய்தனர்.

நான் மக்களை அடைத்து வைத்தால் அந்த இடத்திற்கு செல்வேன் என்று அன்று எச்சரித்தேன். அதன் பிறகு தற்போது ஆட்சி அதிகாரத்தை அவதூறாக பயன்படுத்துகிறார்கள் என்பதால் நாங்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம். இந்த இடைத்தேர்தல் நிச்சயம் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறாது. மேலும் மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும் என்று கூறியுள்ளார்.