
நாடாளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி இம்முறை போட்டியிடவில்லை. அமேதியில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக காங்., மூத்த தலைவர் கே.எல் ஷர்மா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 2004 முதல் எம்பியாக இருந்த ராகுல் 2019இல் தோல்வியடைந்தார். இதனால், தனது சொந்த தொகுதியை விட்டுவிட்டு, தனது தாய் சோனியா காந்தி வெற்றிவாகை சூடிய ரேபரேலியில் களமிறங்குகிறார்.