தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில் அருண்குமார்-மாதவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 வயதில் ஆரூஷ் உட்பட இரு மகன்கள் இருந்தனர். இதில் அருண் உடல்நல குறைவின் காரணமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இந்நிலையில் மாதவிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ரிஷி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்கள் தனிமையில் உல்லாசமாக இருந்த நிலையில் உல்லாசத்திற்கு சிறுவன் ஆரூஷ் இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. உல்லாசத்திற்கு குழந்தை தடையாக இருந்ததால் தினசரி தன் காதலனுடன் சேர்ந்து மாதவி குழந்தையை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதேபோன்று இருவரும் உல்லாசமாக இருக்க சம்பவ நாளில் குழந்தை இடையூறாக இருந்ததாக கருதி கோபத்தில் மாதவி மற்றும் அவருடைய கள்ளக்காதலன் சேர்ந்த அடித்தே கொலை செய்துவிட்டனர். பின்னர் கள்ளக்காதல் ஜோடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்ட நிலையில் இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிந்த நிலையில் அவர்கள் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இருவரையும் தேடிவரும் நிலையில் அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.