தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் கடந்த இரண்டாம் தேதியோடு அவர் கட்சி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்தது. அவர் கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மாவட்ட செயலாளர்கள் உட்பட கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடும் நிலையில் அதற்கான பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்ததால் கட்சியின் பொதுக்குழு நிகழ்ச்சி மற்றும் முதலாம் ஆண்டு விழா போன்றவற்றை நடத்த நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம் .அதன்படி வருகிற 26 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதலாம் ஆண்டு  விழா நடைபெற இருக்கிறது என்று தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது பொதுக்குழுவிழா மற்றும் முதலாம் ஆண்டு விழா போன்றவற்றை தனித்தனியாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கட்சியில் முழுமையாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேலும் இதனால் வருகிற 26 ஆம் தேதி கட்சியின் முதலாம் ஆண்டு விழா மட்டும் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.