
அதிமுக தலைமைச் செயலகம் தற்போது ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜனவரி 11ஆம் தேதி மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அதன்படி ஜனவரி 11ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கழகச் செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.