
தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தெருநாய்கள் சாலையில் செல்லும் பொது மக்களை துரத்தி கடிக்கிறது. அது மட்டும் இல்லாமல் தெருநாய் கடியால் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, தெரு நாய்கள் கடித்து மரணமடைந்த 1,149 கால்நடைகளுக்கு மொத்தம் 42 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆடுகளுக்கான இழப்பீடு 4,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கோழிக்கு வழங்கப்படும் நிவாரண நிதி 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தப்படுவதாக கூறினார்.