தமிழ் சினிமாவில் தெய்வதிருமகள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாரா. இவர் சைவம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிலையில் பல திரைப்படங்களில் அதன் பிறகு குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமின் மகளாக சாரா நடித்திருந்த நிலையில் அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வரும் சாரா தற்போது ஹிந்தியில் அறிமுகமாகியுள்ளார்.

 

இவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் துரந்தர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதில் இந்திய உளவாளியாக ரன்வீர் சிங் நடிக்கும் நிலையில் ஒரு அரசியல் கட்சித் தலைவரின் வாரிசாக சாரா நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.