
மழை வெள்ளத்தால் பாதித்த தென் மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்..
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு, ஜனவரி 7 அன்று நடக்க இருந்த TRB தேர்வை பிப்ரவரி 4 அன்று ஒத்தி வைத்தது போல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு TNPSC ஜனவரி 6,7 அன்று நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்தி வைக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, “விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, அரசின் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என்று தமிழக மக்கள் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சொத்து வரி பெயர் மாற்றத்திற்காண கட்டணத்தை 20 ஆயிரமாக உயர்த்த இந்த முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி மிகவும் கண்டனத்திற்குரியது.
நல்ல அரசு என்பது மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வதாக, மக்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ்கள்,பத்திரங்கள், பெயர் மாற்றங்கள் போன்ற அரசின் நடைமுறைகள் குறைந்த கட்டணத்தில், எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், எனவே சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்காண கட்டணத்தை உயர்த்தும் முடிவை உடனடியாக கைவிட இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, அரசின் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என்று தமிழக மக்கள் வாட்டி வதைத்த நிலையில் தற்போது சொத்து வரி பெயர் மாற்றத்திற்காண கட்டணத்தை 20 ஆயிரமாக உயர்த்த இந்த முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி மிகவும்…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 2, 2024
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு,
ஜனவரி 7 அன்று நடக்க இருந்த TRB தேர்வை பிப்ரவரி 4 அன்று ஒத்தி வைத்தது போல்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு TNPSC ஜனவரி 6,7 அன்று நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்தி வைக்க…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 2, 2024