சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கைகள் தொடர்பாக அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதனைத் தொடர்ந்து ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 40 கட்சிகளை அழைக்க கடிதம் எழுத போகின்றோம்.

தென்னிந்தியா மீது ஒரு கத்தி தொங்குகின்றது. அனைத்து வளர்ச்சியை குறியீடுகளிலும் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு மேற்கொள்வது தான் மத்திய அரசின் திட்டம். பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டம், பெண்கள் கல்வி மூலமாக தமிழ்நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சாதித்துள்ளோம். இதனால் தமிழகத்தில் மக்கள் தொகை குறைவானதன் காரணமாக நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 8 தொகுதிகளை இலக்க நேரிட்டால் 39 எம்பிக்கள் மட்டுமே இருப்பார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.