
தூத்துக்குடியில் நடைபெற உள்ள பணி மைய மாதா தேவாலய தங்க தேர் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 3.10 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். அதன்பிறகு மறு மார்க்கமாக தூத்துக்குடி இருந்து ஆகஸ்ட் 4ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 2.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
மேலும் இந்த ரயில் தாம்பரம், , செங்கல்பட்டு, அரியலூர், திருச்சி, திண்டுக்கல், விழுப்புரம், மதுரை, விருதுநகர்,கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி மேலூர் வழியாக இயக்கப்படும் எனவும் இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.