உத்திரப் பிரதேசத்தின் ஃபரூக்காபாத் பகுதியில் அதிர்ச்சியளிக்கும்  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அதாவது சந்தீப் எனும் நபர், தனது மனைவி ரஞ்சனா தூக்க மருந்து கொடுத்து தன்னை தூங்க வைத்து, பின்னர் கூர்மையான ஆயுதத்தால் தன்னுடைய ஆணுறுப்பை கடுமையாக தாக்கியதாக புகார் அளித்துள்ளார்.

 

தனது நிலையை ஆழ்ந்த கண்ணீருடன் விவரித்த சந்தீப், வீடியோவில், “அவள் என்னை உயிரோடு விட மாட்டேன் என்று நினைக்கிறாள். வேறு ஆண்களுடன் பேசுகிறாள். இதற்குமுன்பும் என்னை கத்தியால் தலையில் தாக்கியிருந்தாள்” என கூறினார். இந்த சம்பவத்துக்குப் பிறகு அவர் போலீஸ் நிலையத்துக்கு ஓடி சென்று நியாயம் கோரியிருந்தாலும், அவரை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்தனர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் சந்தீப்பின் மனவளர்ச்சி மற்றும் உடல் நிலையை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.