நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டி கோணங்கி பாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த 19ஆம் தேதி குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இவருடைய அஸ்தியை கரைப்பதற்காக உறவினர்கள் கல்வேங்கடம் காவிரி ஆற்றுக்கு சென்றனர். ஒரு லாரியில் சுமார் 35 பேர் சென்ற நிலையில் அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி ஈமச்சடங்கு செய்தனர்.

இவர்களுடன் விஜய் என்ற 24 வயது வாலிபரும் சென்று இருந்தார். இவர் ஒரு எலக்ட்ரீசியன். இவர் ஆற்றில் நீந்தி கொண்டிருந்தபோது திடீரென நடுப்பகுதிக்கு சென்று விட்டார். அப்போது ஆழம் அதிகமாக இருந்ததால் நீச்சல் அடிக்க முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விஜயின் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு தான் தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் விஜயின் சடலத்தை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.