தமிழ் சினிமாவில் ‌ முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித். இவர் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அதன்பிறகு அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில் மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்துடன் மீண்டும் அர்ஜுன் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார்.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கும் நிலையில் தற்போது நடிகர் அர்ஜுனனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இளமை தோற்றத்துடன் மாசாக இருக்கும் நடிகர் அர்ஜுனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.