
தென்காசி மாவட்ட பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், கடந்த 2023ஆம் ஆண்டு குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் தெரியவந்துள்ளது.
சிறுமி இந்த சம்பவத்தை தனது தந்தையிடம் தெரிவித்ததும், அவர் உடனடியாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால், அப்போது போலீசாரால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த சூழலில், சிறுமியின் தந்தை உயர்நீதிமன்றத்தை நாட, நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் நீலகண்டனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில், துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய விவகாரமும் நாட்டு மக்களிடையே கனமான கண்டனத்தை கிளப்பியுள்ளது. தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.