
சேலம் மாவட்டம் உச்சனப்பள்ளி பகுதியில் முனியப்பன் கோவிலுக்கு அருகே நேற்று காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அபோது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி வேனை மறித்து சோதனை செய்தனர். அந்த ஆம்னி வேனில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 20 மூட்டைகள் இருந்துள்ளது. மேலும் ஒவ்வொரு மூட்டைகளிலும் 40 கிலோ எடையுடன் மொத்தம் 800 கிலோ அரிசி இருந்தது. இதனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அதன்பின் ஆம்னி ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்ற போது காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்தனர். இதனைத்தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது ரேஷன் அரிசியை கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.