தமிழகம் முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையையும் மீறி விற்பனை செய்யும் கடைகள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள  கடைகளில் சில பிளாஸ்டிக் பொருட்களை  விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் பல ஆய்வாளர்கள் கடை வீதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டப்போது, அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், 5 கடைகளுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.