
80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுகாசினி. சத்யராஜ், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கிய படங்களில் பணியாற்றியபோது அவரை காதலிக்க தொடங்கினார். 1988 ஆம் வருடம் பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இந்த நிலையில் இது குறித்து பேசியுள்ள அவர், “எனக்கு ஆறு வயதிலேயே காசநோய் பிரச்சினை இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்தது பிறகு குறைந்துவிட்டது. எல்லாம் சரியாகிவிட்டது என்று இருந்தேன். ஆனால் 36 வயதில் மீண்டும் அந்த வியாதி வந்துவிட்டது.
இதனால் திடீரென்று எடை கூடி விட்டது. அதுமட்டுமின்றி கேட்கும் திறன் பிரச்சினை ஏற்பட்டது. மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்தது. இதை அப்போது யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்து விட்டேன் .வெளியே சொல்வதை கௌரவ குறைவாகவும் நினைப்பேன். ஆறு மாதங்கள் ரகசியமாக சிகிச்சை எடுத்துக் கொண்டேன். அது இப்போது சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வெளியே செல்கிறேன்” என்று கூறியுள்ளார்.