தமிழகத்தில் வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ரேஷன் கடைகளில் வருகிற 28ஆம் தேதி முதல் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக ரேஷன் கடைகளில் செயல்பட்டு வரும் அமுதம் பல்பொருள் அங்காடி மூலமாக 15 மளிகை பொருட்கள் 499 விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரிய கருப்பன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவு கொண்டாட்டம் என்ற மளிகை பொருட்கள் வருகிற 28ஆம் தேதி முதல் அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகளில் வருகிற 28ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

அதன் பிறகு தீபாவளியை முன்னிட்டு சிறப்பு மளிகை பொருட்கள் விற்பனை பிரீமியம் மற்றும் எலைட் என்று இரு பிரிவுகளாக விற்பனைக்கு வருகிறது. இதில் பிரீமியம் தொகுப்பில் துவரம் பருப்பு 200 கிராம், உளுந்தம் பருப்பு 200 கிராம், கடலைப்பருப்பு 200 g, வறுகடலை 100 கிராம், மிளகு 25 கிராம, சீரகம் 25 g, வெந்தயம் 50 கிராம், கடுகு 50 கிராம், சோம்பு 50 கிராம், நீட்டு மிளகாய் 100 கிராம், தனியா 100 கிராம், புளி 100 கிராம், ரவை 100 கிராம், ஏலக்காய் 5 கிராம் என 14 வகையான பொருட்கள் மொத்தம் 1999 விலையில் விற்பனைக்கு வருகிறது.

இதேபோன்று எலைட் விற்பனை பிரிவில் துவரம் பருப்பு 250 கிராம், உளுந்தம் பருப்பு 250 கிராம், வறுகடலை 200 கிராம், மிளகு 50 கிராம், சீரகம் 50 கிராம், கடுகு 50 கிராம், வெந்தயம் 50 கிராம், சோம்பு 50 கிராம், நீட்டு மிளகாய் 250 கிராம், தனியா 200 கிராம், புளி 100 கிராம், ரவை 100 கிராம், ஏலக்காய் 5 கிராம் என 14 வகையான பொருட்கள் 299 விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேபோன்று அதிரசம்-முறுக்கு காம்போ ஆஃபரில் மொத்தம் ‌5 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு 190 விலையில் விற்பனைக்கு வருகிறது. மேலும் வெளிச்சந்தையில் கிடைப்பதை விட குறைந்த விலைக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு பண்டகசாலைகளில் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் இதனை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் பெரிய கருப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்