
தமிழ்நாட்டில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைக்க பலரும் ஆர்வம் காட்டி வருவார்கள். தமிழகத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க வேண்டும் எனில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி பெறுவது அவசியம். இதற்காக முறையாக கடிதம் கொடுக்கப்பட வேண்டும். அதன்பிறகு பட்டாசு கடைகளை பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் இடங்களில் அமைக்க கூடாது.
அதோடு பாதுகாப்பான இடங்களில் அமைக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் எல்லாம் சரியாக இருந்தால் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இதுவரை 9117 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் 6885 பட்டாசு கடைகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1911 கடைகளுக்கான அனுமதிகள் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.