
இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் யுபிஐ பண பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகிறார்கள். நாளுக்கு நாள் யுபிஐ பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்து வருவதால் அதில் பல நல்ல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய ரிசர்வ் ஆகிய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 அசத்தலான அப்டேட்டுகளை யுபிஐ செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி UPI123pay-ல் ஒரு பரிவர்த்தனைக்கு உச்சவரம்பு 5000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக மாற்றப்படும். இதேபோன்று UPI LITE WALLET உச்சவரம்பு 2000 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்படும். அதேபோன்று ஒரு பரிவர்த்தனைக்கான உச்சவரம்பு 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டுள்ளார்.