தமிழகத்தில் சரவணா செல்வரத்தினம் கடை மிகவும் பிரபலமானது. அதன் உரிமையாளர் தான் லெஜன்ட் சரவணன். இவருடைய உண்மையான பெயர் சரவணன் அருள். தனது கடையின் விளம்பரங்களில் நடிக்க தொடங்கியவர் அப்படியே சினிமா பக்கமும் வந்துவிட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு தற்போது 53 வயதாகிறது. இன்று லெஜன்ட் சரவணன் தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் மக்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதாவது இவருடைய சொத்து மதிப்பு 6000 கோடி என சொல்லப்படுகிறது. சரவணா ஸ்டோர்ஸ் கடையின் ஆண்டு வருமானம் மட்டுமே சுமார் 2495 கோடி என கூறப்படுகிறது.