
வேலூரில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு கலைஞர் விருது, மயிலாடுதுறை கி.சத்தியசீலனுக்கு பெரியார் விருது, மீஞ்சூர் க.சுந்தரத்துக்கு அண்ணா விருது, தென்காசி மலிகா கதிரவனுக்கு பாவேந்தர் விருது, பெங்களூரு ராமசாமிக்கு பேராசியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா, திமுக பவள விழா வருகின்ற 17ஆம் தேதி வேலூரில் திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.