தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹைதராபாத்தில் உள்ள நாச்சரம் என்ற பகுதியில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இங்கு பெட்ரோல் போடுவதற்காக நேற்று மாலை போதையில் இருக்கும் ஒருவர் சென்றுள்ளார். அவர் கையில் சிகரெட் லைட்டர் வைத்திருந்தார். அப்போது அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் தில்லு இருந்தா தீவை பார்ப்போம் என்று கூறினார்.

அப்போது சிரன் மது போதையில் இருந்ததால் உண்மையாகவே பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த ஸ்கூட்டருக்கு தீ வைத்து விட்டார். இதில் அந்த ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த நிலையில் ஒரு தாயும் கைக்குழந்தையும் அதிர்ஷ்டவசமாக அந்த தீ விபத்தில் இருந்து உயிர்த்தப்பினர். அங்கு 10 முதல் 15 பேர் வரை இருந்த நிலையில் இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சிரன் மற்றும் அவரைத் தூண்டிய அருண் என்ற ஊழியர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.