
மும்பையில் நேற்று இந்திய அணியினரின் வெற்றி ஊர்வலம் சிறந்த வெளி பேருந்தில் நடைபெற்ற நிலையில் தற்போது அதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது திறந்தவெளி பேருந்து குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதால் அதற்கு மகராஷ்டிரா மாநில அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக சஞ்சய் ராவத் மும்பையில் கிரிக்கெட் வீரர்களை வரவேற்க குஜராத்தில் இருந்து பேருந்து கொண்டு வர வேண்டுமா எங்களிடம் சொன்னால் ஒரே இரவில் கூட அப்படிப்பட்ட பேருந்துகளை எங்களால் தயார் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு முன்னாள் முதல்வர் உத்தரவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே கிரிக்கெட் வீரர்களை நாங்கள் வரவேற்கிறோம். இருப்பினும் நம்முடைய மகாராஷ்டிராவில் எதற்காக குஜராத் பேருந்துகளை கொண்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே இந்திய அணியில் வெற்றி ஊர்வலத்தை நடத்துவதற்கு குஜராத்தில் இருந்து பேருந்து கொண்டு வந்து மகாராஷ்டிராவை அவமதித்துள்ளீர்கள் என்று விமர்சித்துள்ளார். மேலும் இதற்கு ஆளும் கட்சியை சேர்ந்த சஞ்சய் ஷிர்சத் குஜராத்திலிருந்து பேருந்து கொண்டு வந்ததில் என்ன தவறு இருக்கிறது. குஜராத் என்ன பாகிஸ்தான் நாட்டிலாக இருக்கிறது என்று பதிலடி கொடுத்துள்ளார்.