
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆக்கியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் ட்விட்டருக்கு போட்டியாக கடந்த ஜூலை மாதம் திரெட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி ஆரம்பத்தில் பயனர்களை கவர்ந்தாலும் அதன் பிறகு பயன்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த செயலியில் புதிய அப்டேட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது இதில் தேடலில் அனைத்து மொழிகளையும் பயன்படுத்தலாம். கீவேர்ட் தேடல் அனைத்து மொழிகளையும் ஆதரிக்கும் என்றும் இது உங்களுக்கு விருப்பமான உரையாடல்களை கண்டறிவதற்கு வழிவகுக்கும் என்றும் இன்ஸ்டாகிராம் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.