
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய உடல் இன்று பெரம்பலூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி பவானி சுப்பராயன் தலைமையில் விசாரணைக்கு வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி இல்லை எனக் கூறிய நீதிபதி அவருடைய உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் கிராமத்தில் அடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன் பிறகு நாளை பள்ளி திறக்கப்பட வேண்டும் என்பதால் அவருடைய உடலை இன்றே பள்ளி மைதானத்தில் இருந்து எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால் சற்று நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கப்பட இருக்கிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் உடல் எடுத்துச் செல்லப்படும் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.