திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதையில் கிரிவலம் செல்வார்கள்.. இந்த மாதம் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற 24-ஆம் தேதி பக்தர்கள் கிரிவலம் செல்ல உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் காலை 11 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.

அதனைப் போலவே மறு மார்க்கத்தில் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் ரயில் விழுப்புரத்திற்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் தண்டரை, அண்டம்பள்ளம், ஆதிச்சநூர், திருக்கோவிலூர், ஆயந்தூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.