
கடலூர் தென்பெண்ணை ஆற்றுக்குள் ஒரு கார் கவிழ்ந்தது. அந்த காரில் இருந்த ஐந்து பேரும் நீந்தி கரைக்கு வந்தனர். ஆற்றின் குறுக்கே இருக்கும் தரை பாலத்தில் கார் சென்றது. அப்போது இருட்டில் வழி தெரியாமல் திடீரென கார் ஆற்றுக்குள் கவிழ்ந்து முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது.
அந்த காரில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் பயணித்தனர். அவர்கள் காரின் கதவை திறந்து கொண்டு தண்ணீரில் நீச்சல் அடித்து உயிர் தப்பினர். பின்னர் கார் பொக்லைன் எந்திரம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டது. ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்தது விசாரணையில் தெரியவந்தது.