கனடாவில் இருந்து பெங்களூருவிற்கு திருமண நிகழ்ச்சிக்காக வந்த இந்திய வம்சாவளியினரான விக்கி மற்றும் பியா, புகைப்படக்காட்சிக்காக பயன்படுத்திய கலர் பாம் வெடித்து, பெண்ணுக்கு  தீவிர காயம் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண போட்டோசூட் எடுக்கும் போது கலர் பாம் பின்னணியில் வெடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், திடீரென அது தவறாக வெடித்து  நேரடியாக ஜோடியை தாக்கியது.

திருமண விழாவிற்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் இடையில் நடந்த இந்த சம்பவத்தால், மணப்பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் விக்கி மற்றும் பியா, திருமணங்களில் தீவிர பட்டாசுகள், புகை குண்டுகள் போன்றவற்றின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பியா தனது காயங்களுடன் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், அவருடைய முதுகில் தீவிரமான தீக்காயம் ஏற்பட்டதோடு, முடியும் எரிந்துவிட்டது. “கணவர் எனைத் தூக்கிக்கொண்டிருக்கும் போது, கலர் பாம் எங்களை நேரடியாக தாக்கியது. தீய கண் (Evil Eye) என்பது உண்மையே” என பியா பதிவிட்டுள்ளார். இது போன்ற புகை குண்டுகள் மற்றும் தீவிர பட்டாசுகளை திருமணங்களில் கட்டுப்பாடின்றி பயன்படுத்துவது, ஆபத்தான சூழ்நிலைகளை உருவாக்குகிறது என்பதால், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த வீடியோ உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.